கற்க கசடற
திருக்குறள் என்னும் நூல் திருவள்ளுவரால் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட ஒரு அற்புதமாகும். இதை விரிவாக காண்போம். படிக்கவேண்டிய நூல்களை மிகவும் ஆராய்ந்து தெரிந்தெடுத்து அதன் பின்னர் படிக்க வேண்டும். ஒரு சில பத்து புத்தகங்களை எழுதுகிறார்கள். இன்னும் சிலர் 50 புத்தகங்களை எழுதுகிறார்கள். ஆனால் திருவள்ளுவர் தம் வாழ்நாள் முழுக்க ஒரே ஒரு நூலை தான் எழுதி இருக்கிறார். எனவே திருக்குறளை எவ்வளவு சிந்தித்து சிந்தித்து எழுதியிருக்க வேண்டும். சில நூல்களைப் பற்றி சிந்தனை செய்யவே வேண்டாம். சில நூல்கள் படித்தவுடனேயே புரியும் வகையில் இருக்கும். சில நூல்களை படித்துவிட்டு சிறிது நேரம் ஆழமாக சிந்திக்க வேண்டும். பூமியில் விளையும் பொருட்களில் சிலவற்றை பூமிக்கு மேலே விளையும். சிலவற்றை பூமிக்கு அடியில் அதாவது மண்ணுக்குள்ளே விளையும். அவற்றை நாம் தான் நம் கையை உபயோகித்து தோண்டி எடுக்க வேண்டும். அதுபோல நாம் படிக்கும் நூல்களில் சிலவற்றை ஒருமுறை படித்தால் போதாது. அதனை மீண்டும் மீண்டும் ஆழ்ந்து படிப்பதன் மூலம் அதன் பொருள் புரியும். அவ்வாறான நூல்களை ஆழ்ந்து ஆராய்ந்து நன்கு படிக்க வேண்டும். அதனால்தான் திருவள்ளுவர் "கற்க கசடற கற்பவை" என குரளை எழுதியுள்ளார்.
கல்வி மற்றும் பள்ளி
நமது எதிர்காலத்தை உருவாக்கும் பள்ளிக்கு கோவில் என்று பெயர் வைத்தார் பாரதியார். ஏனென்றால் கல்வி கூடங்களில் தான் குழந்தைகளின் எதிர்காலம் நிர்ணயிக்கப்படுகிறது. மாணவர்கள் எல்லோரும் எதிர் காலத்திலே ஒரு உயர்ந்த மனிதர்களாக வேண்டும். இந்த அகிலம் போற்றக்கூடிய பெரிய அறிஞர்களாக ஆக வேண்டும். எனவேதான் கோவில்கள் ஆகிய பள்ளிக்கூடங்களில் குழந்தைகளை கொண்டு வந்து விடுகிறோம். கல்வி கற்பதற்காகவே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பி விடுகிறோம். பள்ளிக்கூடங்களில் உள்ள ஆசிரியர்கள்தான் இளம் பிள்ளைகளை ஒரு நல்ல குடிமகனாக உருவாக்க முடியும். உதாரணமாக ஒரு ஆசிரியரின் மூலமாகவே, ஒரு மாணவன் மருத்துவராகவும், அறிவியல் அறிஞராகவும், ராணுவ வீரராகவும் ஆக முடியும். ஒரு மாணவனின் எதிர்காலத்தை நோக்கி செல்ல ஆசிரியர்கள் மிகவும் அவசியம்.
காலமறிதல்
இந்த அகிலத்தில் மிகவும் அரிதானது என்னவென்றால் அது காலம் தான். மற்ற அனைத்தும் போனால் வரும் ஆனால் காலமும் நேரமும் போனால் வராது. காலம் போன பிறகு நூர் காலத்தை மாற்ற இயலாது. அதற்கு நமக்கு நேரமும் கிடைக்காது. இதற்காகத்தான் காலமறிதல், கல்வி என்னும் இரண்டு அதிகாரங்களையும் திருவள்ளுவர் எழுதியுள்ளார்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி"
என குரலை எழுதியுள்ளார் திருவள்ளுவர்.
கல்வி என்பது மனிதனுக்கு மிகவும் அவசியமான ஒன்றாகும். எனவே அனைவருக்கும் கல்வி அத்தியாவசியம். இதன்மூலம் என்ன தெரியவருகிறது நாம் அனைவரும் நல்ல முறையில் படித்து முன்னேற வேண்டும்.
Post a Comment