Google pay fixed deposit
கூகுள் நிறுவனத்தின் பணப் பரிவர்த்தனை செய்ய உபயோகிக்கும் செயலியான Google pay-ல் தற்போது fixed deposit செய்யலாமென அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அதற்கான option-யை செயலியில் update செய்துள்ளதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் எளிய முறையில் online-ல் பத்து நிமிடத்தில் fixed deposit செய்ய முடியும். இதற்கான முழு விவரங்களையும் செயலியில் அப்டேட் செய்துள்ளதாக கூகுள் நிறுவனம் கூறியுள்ளது.
Google invest in Airtel
கூகுள் நிறுவனம் ஏர்டெல் நிறுவனத்தில் பல கோடி ரூபாய் முதலீடு செய்வதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. இதற்கு முன்னதாக கூகுள் நிறுவனம் ஜியோ நிறுவனத்தில் 34 ஆயிரம் கோடி ரூபாய் முதலீடு செய்த நிலையில் தற்போது ஏர்டெல் நிறுவனத்திலும் முதலீடு செய்ய முடிவு எடுத்துள்ளது. இதனால் இந்தியாவில் ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனத்திற்கு இடையே போட்டிகள் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கூகுள் நிறுவனத்திற்கு இந்த இரண்டு நிறுவனத்திலும் வாடிக்கையாளர்களின் விவரங்கள் எளிதாக கிடைக்க வாய்ப்புள்ளது.
Oneplus
ஒன் பிளஸ் தரப்பிலிருந்து Oneplus Nord 2 6GB varient விற்பனைக்கு வருகிறது என அதிகாரபூர்வமாக வெளியிடப்பட்டுள்ளது. ஒன் ப்ளஸ் நிறுவனம் சமீபத்தில் இந்த மொபைலை வெளியிட்டார்கள். ஆனால் இதில் Oneplus Nord 2 8GB varient மட்டுமே விற்பனைக்கு வந்திருந்தது. தற்போது 6gb variant-டும் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த மாதம் 30-ஆம் தேதி இந்த மொபைலை விற்பனைக்கு கொண்டு வருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Samsung galaxy A52s
Samsung galaxy A52S என்ற மாடல் மொபைலை வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. இன்னும் ஒருசில தினங்களில் விடப்படும் இந்த மாடல் மொபைலில் 4500mAh பேட்டரி,64Mp கேமிரா மற்றும் super amoled display ஆகிய சிறப்பு அம்சங்களை கொண்டுள்ளது. மேலும் Snapdragon 778 processor-யை கொண்டுள்ளது.
New Royal Enfield classic
Royal Enfield நிறுவனம் தனது புதிய மாடல் பைக்கை செப்டம்பர் 1 ஆம் தேதி வெளியிடுவதாக கூறியுள்ளது. அந்த பைக் மாடலின் பெயர் Royal Enfield classic 2021 ஆகும். ஆனால் இதற்கு முன்னதாகவே ஒரு நபர் இந்த வண்டியின் சிறப்பம்சங்கள் மற்றும் அதனை ஒரு வீடியோவாக எடுத்து online-ல் பதிவிட்டுள்ளார். மேலும் இந்த பைக்கின் விலை, பழைய Royal Enfield classic பைக்கின் விலையாகவே வெளியாகியுள்ளது.
Please Wait for code...
Super bro
ReplyDeletePost a Comment