Elon Musk is alien 

    எலான் மஸ்க்கிடம் ஒருவர் ஒரு கேள்வியை கேட்டுள்ளார். அதற்கு எலான் மஸ்க்கும் பதில் அளித்துள்ளார். அந்தக் கேள்வி என்ன தெரியுமா? எலான் மஸ்க் நீங்கள் ஒரு ஏலியனா. அதற்கு எலான் மஸ்க்கும் ஆம் என்று கூறியுள்ளார். இந்த நிகழ்வு சமூக வலைத்தளத்தில் அதிக அளவு பரவி வருகிறது. 

Google app store income 

    கூகுள் நிறுவனம் மொபைலில் செயலிகள் பதிவிறக்கம் செய்ய கூகுள் ஆப் ஸ்டோர் என்ற செயலியை கொண்டுள்ளது. இந்த ஆப் ஸ்டோர் மூலம் கூகுள் நிறுவனம் பல கோடி ரூபாய் வருவாய் ஈட்டி வருகிறது. குறிப்பாக 2019ஆம் ஆண்டு மட்டும் கூகுள் ஆப் ஸ்டோரில் 82 ஆயிரம் கோடி ரூபாய் வருவாய் ஈட்டி உள்ளது. இது சமீபத்தில் நடந்த நீதிமன்ற வழக்கில் வெளிவந்த அதிகாரப்பூர்வ செய்தி ஆகும்.
Google app store income

Mobile Caught Fire

    ஒருவரின் சட்டைப் பாக்கெட்டில் இருந்த மொபைல் திடீரென சூடாக எரிந்து சாம்பல் ஆகிய வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. அதாவது ஒரு கடையில் ஒரு நபர் உட்கார்ந்து பேசிக் கொண்டிருந்தபோது திடீரென அவரின் மொபைல் சூடாகி புகை வந்தது. அவர் திடீரென மொபைலை எடுத்து கீழே வீசிவிட்டார். அந்த மொபைல் எரிந்து சாம்பல் ஆகிவிட்டது. இந்த காட்சி அந்த கடையில் இருந்த சிசிடிவி கேமிராவில் பதிவாகியுள்ளது. ஆனால் எரிந்த மொபைலின் நிறுவனத்தின் பெயர் தெரியவில்லை.

Tata new EV

    டாட்டா நிறுவனம் Tata Tigor என்ற புதிய மாடல் காரை வெளியிட்டுள்ளது. இந்த கார் முழுமையாக மின்சாரத்தின் மூலம் இயங்கும் கார் என கூறப்படுகிறது. Tata Nexon காருக்கு அடுத்ததாக போட்டி போடும் வகையில் புதிய சிறப்பம்சங்களுடன் வருகிறதாம். இதன் விலை இந்தியாவில் 10 லட்சத்திற்கும் குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த காரை வாங்க அதிக அளவில் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது. 

Realme pad Leaks

    ரியல்மி தரப்பிலிருந்து realme pad புதிதாக வெளியிடுவதாக கூறி உள்ளது. இந்த டேப்லெட் MediaTek g88 என்ற பிராஸஸரை கொண்டுள்ளது. மேலும் 7100mAh பேட்டரி மற்றும் super amoled display போன்ற பல சிறப்பமசங்களுடன்
 வரப் போகிறதாம். இந்த realme pad-ன் விலை இந்தியாவில் 20 ஆயிரம் ரூபாய்க்கு குறைவாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே இந்த டேப்லெட் கூடிய விரைவில் வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.

Samsung Leaks

    சாம்சங் தரப்பிலிரந்து Samsung galaxy A52S என்ற புதிய மாடல் மொபைலை வெளியிட அந்த நிறுவனம் முடிவு செய்துள்ளது ‌‌‌‌. இந்த மொபைல் Snapdragon 778 என்ற processor-யை கொண்டுள்ளது. இந்த மொபைல் இந்தியாவில் 35 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 
 
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

1 Comments

Post a Comment

Previous Post Next Post