நீர்வழி பயண தொடக்கம் 

     நீர்நிலைகளில் மரக்கிளைகள் மிதந்து செல்வதையும் அவற்றின்மீது பறவைகள் பிற உயிரினங்கள் அமர்ந்து செல்வதையும் பழங்கால மனிதர்கள் கண்டனர். அதனைக் கண்ட மனிதன் நீரில் மிதக்கும் பொருட்களின் மீது தானும் ஏறி பயணம் செய்ய முடியுமென அவன் நினைத்தான். முதலில் சிறு கட்டைகளை பயன்படுத்தி சிறிய நீர்நிலைகளை கடந்தான். அதன் பின்னர் நீர் உயிரினமான மீன்கள் தம் உடலின் இரு பக்கங்களிலும் உள்ள துடுப்பு போன்ற பகுதிகளை பயன்படுத்தி தண்ணீரை பின்னுக்குத்தள்ளி நீந்துவதை கண்டான். அதற்குப் பிறகுதான் மனிதனும் துடுப்புகளை பயன்படுத்த தொடங்கினான். 


      தமிழர்கள் அக்காலத்தில் சிறிய நீர் நிலைகளை கடக்க தெப்பம், மிதவை, புணை, படகு, தோணி, ஓடம் போன்றவற்றை பயன்படுத்தினான். மேலும் கலம், வங்கம், நாவாய் போன்றவற்றைக் கொண்டு கடல் கடந்து தமிழர்கள் பயணம் செய்தனர். இவை அளவில் மிகவும் பெரியது. 


கப்பலின் உறுப்புகள் 

     கப்பல்களில் பலவிதமான உறுப்புக்களை கொண்டுள்ளது. அதில் சிலவற்றை,

1) எரா

2) பருமல்

3) கூம்பு 

4) பாய்மரம் 

5) வங்கு

6) நங்கூரம் 

7) சுக்கான் 


      சமுக்கு என்னும் ஒரு கருவியை கப்பல்களில் உபயோகித்தனர் என்று கப்பல் சாத்திரம் என்னும் நூல் குறிப்பிடுகிறது. மேலும் கப்பல் ஓட்டுபவரை 

1) கப்பலோட்டி

2) நீகான் 

3) மீகாமன் 

4) மாலுமி 

The naval art of the Tamil's

கப்பலை செலுத்தும் முறை 

     தமிழர்கள் காற்றின் திசையை அறிந்து கப்பலைச் செலுத்தும் முறையை நன்கு அறிந்திருந்தனர். திசைகாட்டும் கருவியை பயன்படுத்தியும் வானில் தோன்றும் விண்மீன்களின் நிலையை வைத்தும் திசையை அறிந்து கப்பலை செலுத்தினர். கடலில் காற்று வீசும் திசை, கடல் நீரோட்டங்களின் திசை ஆகியவற்றை தமிழர்கள் பட்டறிவால் நன்கு அறிந்து அவற்றிற்கேற்ப உரிய காலத்தில் சரியான திசையில் கப்பலை செலுத்தினர். புயல், மழை போன்ற இயற்கை சீற்றரத்தை தமிழர்கள் கோள்களின் நிலையை வைத்தும் கடல் நீர் பொங்கும் காலத்தை வைத்தும் அறிந்து கப்பலை செலுத்தினர். 


கலங்கரை விளக்கம் 

    கடலில் செல்லும் கப்பல்களுக்கு துறைமுகம் இருக்கும் இடத்தை காட்டுவதற்காக ஏற்படுத்தியது கலங்கரை விளக்கம் எனப்படும். மிகவும் உயரமான கோபுரத்தின் உச்சியில் ஒளிவீசும் விளக்கினை கொண்டதாக இது அமைந்துள்ளது. கலங்கரை விளக்கம் என்பதன் பொருள் கப்பலை அழைக்கும் விளக்கு ஆகும். மேலும் பெரிய கப்பல்களான நாவாய், வங்கம் போன்றவை கரை ஒதுங்க முடியாது. ஆதலால் பெரிய கப்பல்களில் உள்ள சரக்குகளை தோணிகள் மூலம் கரைக்கு கொண்டு வருவார்கள். 


பாய்மரக்கப்பல் 

    காற்றின் உதவியால் செலுத்தப்படும் கப்பல்கள் பாய்மரக் கப்பல்கள் ஆகும். பெரிய பாய்மரம், திருக்கைத்தி பாய்மரம், காண பாய்மரம், கூசு பாய்மரம் போன்ற பலவிதமான பாய் மரங்களை தமிழர்களும், தமிழர்கள் மூலம் பிற நாட்டவர்களும் இதனைப் பயன்படுத்தினர்.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post