தினமும் விடியற் காலையில் எழுந்து அன்றாட வேலைகளை செய்வது. காலையில் எழுந்து காலைக் கடனை முடிப்பது. தினமும் பல் துலக்குவது. தினமும் குளித்தல். துவைத்த துணிகளை அணிதல். நன்றாக படிப்பது போன்றவை நல்ல பழக்க வழக்கங்கள் ஆகும். மேலும் ஒழுக்கமாக இருப்பது மற்றும் பொய் பேசாமல் உண்மையை மற்றும் பேசுவது மனித வாழ்க்கையில் மிகவும் அவசியமான ஒன்றாகும். தீய வார்த்தைகள் மற்றும் தீய செயல்களை செய்வதை தவிர்த்தல். அதிக நேரம் கைபேசி உபயோகிப்பதை தவிர்த்தல். தினமும் மாலையில் ஒன்று முதல் இரண்டு மணி நேரம் விளையாடுதல் போன்றவை நமக்கு நன்மை சேர்க்கும். தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் வரை குடிநீர் குடிப்பது உடலுக்கு நல்லது. நாம் சாப்பிடும் உணவில் சத்தான காய்கறிகளை சேர்த்து உண்பது நல்லது.
தினமும் ஒரு கீரை வகைகளை சேர்த்து உண்டால் நோயற்ற வாழ்க்கையை வாழலாம். குறிப்பாக முருங்கைக்கீரையில் மிகவும் மகத்துவமான சத்துக்கள் உள்ளன. பருப்பு வகைகளை உண்பதன் மூலம் உடல் தசைகள் வலுவடையும். கடைகளில் விற்கப்படும் குளிர்பானங்களை குடிக்காமல், தென்னை மரத்தில் காய்க்கும் இளநீரை பறித்து குடிப்பதால் உடலுக்கு மிகவும் நல்லது. பனங்கிழங்கு மற்றும் பனை வெல்லம் போன்ற உணவுகளை உண்பதன் மூலம் உடலின் பல நோய்கள் குணமடையும். குறிப்பாக சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். எனவே மேற்கண்ட அனைத்து வழிமுறைகளையும் பின்பற்றி உங்கள் வாழ்க்கையில் நோயற்ற வாழ்வையும் குறைவற்ற செல்வமும் பெற்று நீண்ட நாள் வாழ வேண்டும் என்று இறைவனிடம் பிராத்திக்கிறேன்.
Please Wait Next Post...
Post a Comment