Windows 11 launch 

    Windows 11 வெளியிடும் தேதியை அந்த நிறுவனம் வெளியிட்டுள்ளது. அதாவது இந்த வருடம் அக்டோபர் ஐந்தாம் தேதி விண்டோஸ் 11 OS-யை உலக அளவில் வெளியிடுவதாக மைக்ரோசாப்ட் நிறுவனம் அறிவித்துள்ளது. இதன் மூலம் எளிதாக கணினி அல்லது மடிக்கணினியை உபயோகிக்க முடியும் என்பதில் சந்தேகமில்லை. 

Instagram age verification 

    இன்ஸ்டாகிராம் நிறுவனம் தனது செயலியில் பயனாளர்கள் உள்ளே செல்லும் போது ஒவ்வொரு முறையும் தனது பிறந்த தேதியை பூர்த்தி செய்யுமாறு கொண்டு வரப்போகிறது. ஏனென்றால் 18 வயதுக்குட்பட்ட பயனாளர்கள் தவறான வழியில் சென்று விடக்கூடாது என்ற நோக்கத்தோடு இவ்வாறு செய்துள்ளதாக இன்ஸ்டாகிராம் நிறுவனம் கூறியுள்ளது.
Instagram

PUBG New State

    ஏற்கனவே இந்தியாவில் PGMI என்ற PUBG Game வெளியாகி அனைவராலும் விளையாடப்பட்டு வருகிறது. இந்த நிலையில் PUBG New State என்ற மற்றொரு PUBG Game வெளியாகி, தற்போது இந்தியாவில் 2 PUBG Game விளையாடப்பட்டு வருகிறது. ஆனால் இந்த இரண்டு Game-ல் எந்த Game சிறந்தது என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும்.

VPN Ban in India 

    VPN செயலியை தடை செய்ய வேண்டும் என்று இந்திய அரசாங்கத்தின் பாராளுமன்றத்தில் உறுப்பினர்கள் கேட்டுக்கொண்டதாக சொல்லப்படுகிறது. VPN செயலி நல்ல செயல்களுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. மேலும் தீய செயல்களுக்கும் உபயோகப் படுத்தப்படுகிறது. இதனால் இதனை நன்கு ஆராய்ந்து தடை செய்ய வேண்டும்.

Jio New Plan

    ஜியோ நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகளை கொண்டு வந்துள்ளது. 
 1)Rs.499-3GB(day) 28days
 2)Rs.666-2GB(day) 56days
 3)Rs.888-2GB(day) 84days 
மேலும் இந்த சலுகைகளில் Disney Plus hotstar ஒரு வருட subscription கொடுக்கப்படுகிறது.

Texas- Smart Shirt 

    அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் ஒரு புதிய சட்டை ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த சட்டையை சாதாரணமாக ஒரு மனிதன் அணிந்து கொள்ளலாம். மேலும் இந்த சட்டை மனிதனின் இதயத் துடிப்பை துல்லியமாக கவனித்து கொண்டிருக்கும். ஏதேனும் இதயத்துடிப்பில் பிரச்சனை இருப்பின் உடனடியாக அறிவுறுத்துமாறு, அந்த நாட்டு ஆராய்ச்சியாளர்கள் இந்த சட்டையை கண்டுபிடித்துள்ளனர்.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post