Tesla cars in India
இந்தியாவில் டெஸ்லா கார்களுக்கு நமது அரசாங்கம் அதிகாரபூர்வமாக ஒப்புதல் கொடுத்துள்ளதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. கூடிய விரைவில் இந்தியாவில் டெஸ்லா கார்கள் விற்பனைக்கு வருமென அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் உலக அளவில் மிகவும் பாதுகாப்பான கார்களில் இதுவும் ஒன்றாகும். அதனால் இந்த கார் மீது அதிகம் ஆர்வம் காட்ட வாய்ப்புள்ளது.
Grace lady robot
வெளிநாட்டில் புதிதாக ரோபோ ஒன்றை உருவாக்கியுள்ளனர். இந்த ரோபோவின் பெயர் கிரேஸ். ஏற்கனவே சோபியா என்ற ரோபோட்டை உருவாக்கி வெளியிட்ட துபாய் நிறுவனம்தான்,இந்த ரோபோட்டையும் உருவாக்கியுள்ளது. இந்த ரோபோட்டின் வேலை மருத்துவமனையில் செவிலியராக பணி புரிவதே ஆகும். தற்போது கொரோனா வைரஸ் தாக்கம் அதிக அளவு இருப்பதால் இவ்வாறு ரோபோக்களை உருவாக்கியதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அதற்கு ஏற்றவாறு இந்த ரோபோவிற்கு கோடிங் செய்துள்ளதாக கூறப்படுகிறது.
Make calls without network
உங்கள் மொபைலில் சிக்னல் இல்லை என்றாலும் உங்களால் கால் பேச முடியும் என ஐபோன் நிறுவனம் கூறியுள்ளது. அதாவது புதிதாக வெளியிடப்பட்டுள்ள ஐபோன் 13 மாடல் மொபைலில் சிக்னல் இல்லை என்றாலும் செயற்கைக்கோள் மூலமாக உங்களுக்கு சிக்னல் கிடைக்குமாறு செய்வதாக அவர்கள் கூறியுள்ளனர். இதனால் ஐபோன் நிறுவனத்தின் வளர்ச்சி அதிக அளவு உயரும் என்பதில் சந்தேகமில்லை.
Telegram crosses 1 Billion Users
டெலிகிராம் தற்போது ஒரு பில்லியன் பயனாளர்களை கடந்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்தியாவில் மிகப் பெரிய வியாபார ரீதி நிறுவனமான டெலிகிராம் உலக அளவில் ஒரு பில்லியன் பயனாளர்களை கொண்ட நிறுவனங்களில் ஒன்றாக தனது தடத்தை பதித்துள்ளது. மேலும் இது ஒரு இந்திய நிறுவனம் என்பது குறிப்பிடத்தக்கது.
Tata Tigor
Tata Tigor மாடல் காரை அந்த நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது. இந்த காரின் விலை 12 லட்சமாகவும், இதன் மைலேஜ் 306 கிலோமீட்டராகவும் இருக்கிறது. மேலும் EV கார்களிலேயே மிகக் குறைந்த விலை கார் இதுதான். இதனால் இதன் மீது அதிக நபர்கள் நாட்டம் கொண்டு வாங்க வருவார்கள் என எதிர்பார்க்கப் படுகிறது. இது ஒரு மின்சார கார் என்பது குறிப்பிடத்தக்கது.
Google maps feature
கூகுள் நிறுவனம் கூகுள் மேப்பில் ஒரு புதிய சிறப்பம்சத்தை கொண்டு வருவதாக கூறியுள்ளது. அதாவது நம் நெடுஞ்சாலைகளில் செல்லும் போது சுங்கச்சாவடியை(Toll gate) கடந்துதான் செல்லுவோம். அந்த சுங்கச்சாவடியில் எவ்வளவு கட்டணம் வசூலிக்கப்படும் என இனி கூகுள் மேப்பில் கொண்டுவருவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Please Wait Next Post...
Super nice
ReplyDeletePost a Comment