நெல்லை மாவட்டம் மானூர் பகுதியில் பொதுமக்களை ஆபாசமாக திட்டிய காவல் உதவி ஆய்வாளரின் வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளத்தில் வேகமாக பரவிக் கொண்டிருக்கிறது. மானூர் காவல் நிலையத்தில் உதவி ஆய்வாளராக பணியாற்றி வருபவர் செல்வகுமார். இவர் ஊரடங்கை ஓட்டி அந்தப் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது மானூர் வடக்குத்தெரு பகுதிக்கு செல்லும்போது அங்கிருக்கும் இளைஞர்கள் ஓட்டம் பிடித்தனர். அவர்கள் ஓடியதை பார்த்த செல்வகுமார் நிற்கும்படி கூறியுள்ளார். ஆனால் அவர்கள் நிற்காமல் ஓடியதால் செல்வகுமார் துரத்தி சென்றதாக கூறப்படுகிறது. அதன் பின்னர் அங்கே இருக்கும் ஒரு இளைஞரின் பெற்றோருக்கும் காவல் ஆய்வாளருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் காவல் ஆய்வாளர் செல்வகுமார் அவர்களை ஆபாச வார்த்தைகளால் திட்டியுள்ளார்.
இதனை அப்பகுதியில் உள்ளவர்கள் வீடியோ எடுத்துள்ளனர். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவிக் கொண்டு இருக்கிறது. மேலும் இந்த செய்தி அனைவரும் பேசும் வகையில் சமூக வட்டாரங்களில் பரவிக் கொண்டுள்ளது. மேலும் இதற்கு அந்த பகுதியில் உள்ள மக்கள் உதவி ஆய்வாளரை எதிர்த்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். மூன்று மணி நேரமாக நடந்த இந்த சண்டைக்குப் பிறகு இந்த பேச்சுவார்த்தை முடிவுக்கு வந்தது. அதன் பின்னர் அந்த காவல் நிலையத்தின் ஆய்வாளரின் மூலம் அந்த சண்டை முடிவுக்கு வந்தது. மேலும் அந்த ஆய்வாளரின் மீது அப்பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் எச்சரித்துள்ளனர். இதற்குமேல் இதுபோல நடந்தால் உங்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளனர். இதற்கு அந்த காவல்நிலையத்தின் ஆய்வாளர் சரி என்று கூறி அந்த இடத்தை விட்டு சென்றுள்ளார்.
Good
ReplyDeletePost a Comment