Data price in worldwide

    உலக அளவில் சிம் நிறுவனங்களின் டேட்டா விலை பற்றிய விவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் மிகவும் குறைந்த விலைக்கு இஸ்ரேல் நாடு கொடுக்கிறது. இந்த நாட்டில் ஒரு ஜிபி டேட்டாவை வெறும் 4 ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது. கடந்த வருடம் இந்தியா குறைந்த விலையில் டேட்டாவை கொடுத்தது. ஆனால் தற்போது இந்தியாவில் சராசரியாக ஒரு ஜிபி டேட்டாவை ஐம்பது ரூபாய்க்கு கொடுக்கப்படுகிறது என ஆய்வின் முடிவில் வந்துள்ளது. உலக அளவில் சராசரியாக ஒரு ஜிபி டேட்டா 300 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் இன்டர்நெட் ஸ்பீட்டில் இந்தியா 124 ஆவது இடத்தில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Redmi new products

    ரெட்மியில் இந்த வாரம் இரண்டு பொருட்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளனர். அவை Redmi 10 prime மற்றும் Earbuds 3 pro ஆகியவை ஆகும். Redmi 10 prime மொபைலில் 6000mAh பேட்டரி கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் earbuds 3 pro இந்தியாவில் மூவாயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. 

Trai warns telecom networks 

    ஒரு சிம் நிறுவனத்தில் இருந்து மற்றொரு சிம் நிறுவனத்திற்கு MNP மூலம் மாறும் போது புதிதாக செல்லும் நிறுவனத்தில் பல சலுகைகள் கொடுப்பதால் அடிக்கடி வாடிக்கையாளர்கள் MNP செய்வதாக ட்ராய் கம்பெனி எச்சரித்துள்ளது. மேலும் இது ஒரு தவறான செயல் என சிம் நிறுவனங்களுக்கு கூறியுள்ளது. 

Jio phone next for 500rs 

    ஜியோ நிறுவனம் தனது புதிய ஜியோ போன் நெக்ஸ்ட் மொபைலை 500 ரூபாய்க்கு விற்கப் போவதாக செய்திகள் வந்து கொண்டிருக்கிறது. அதாவது ஒரு மாதத்திற்கு 500 ரூபாய் வீதம் மொத்தம் பத்து மாதத்திற்கு 5 ஆயிரம் ரூபாயாக இருக்கும் என கூறப்பட்டு வருகிறது. இதற்கு முன்னதாக வந்த ஜியோ மொபைல் மிகவும் குறைந்த தரத்திலும், பயனாளர்கள் உபயோகப்படுத்த மிகவும் சிரமமாக இருந்தது. இந்த மொபைல் சிறந்த முறையில் உபயோகிக்க முடிந்தால் அதிகம் விற்பனையாகும். 
Jio phone next

Pirate Bay has bitcoin worth 

    Pirate bay கம்பெனிக்கு 2013 ஆம் ஆண்டு ஒருசில நிதிகள்(Donation) bitcoin மூலம் வந்துள்ளது. அந்த பிட்காயின் இன்றைய விலை 40 கோடி ரூபாயாக இருக்கிறது. வெறும் 8 வருடத்தில் பிட்காயினின் விலை அதிகம் உயர்ந்திருக்கிறது. 

PUBG Creator Quits 

    PUBG Mobile என்ற விளையாட்டு செயலியை உருவாக்கிய பிரண்டன் கிரீன் தற்போது அந்த நிறுவனத்தில் இருந்து விலகி உள்ளார். விலகி மற்றொரு புதிய கம்பெனியை உருவாக்க உள்ளார். அந்த கம்பெனிக்கு player known productions என்று பெயர் சூட உள்ளார். மேலும் இந்த நிறுவனத்தின் மூலம் பல புதிய விளையாட்டை உருவாக்க இருப்பதாக கூறப்படுகிறது. 

Mahindra manufacture stop 

    மஹிந்திரா நிறுவனம் சில நாட்களுக்கு தனது கார் உற்பத்தியை நிறுத்துவதாக கூறியுள்ளது. காரணம் கடந்த ஆண்டு குறைந்த அளவு உபரிப் பொருட்கள் வாங்கியதால் உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது.

 ‌

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post