Google vaccination details 

    கூகுள் சர்ச் இஞ்சன், கூகுள் மேப் மற்றும் கூகுள் அசிஸ்ட்டன்ட் போன்ற செயலிகளில் நீங்கள் தடுப்பூசி பற்றி தேடும்போது, அதற்கான முழு விவரங்களை பார்க்க முடியும். மேலும் உங்களுக்கு அருகில் எத்தனை தடுப்பூசி மையம் இருக்கிறது, எத்தனை தடுப்பூசிகள் இருக்கிறது போன்ற பல விவரங்களை தெரிந்து கொள்ளலாம். அந்தப் பகுதியில் தடுப்பூசியின் விலை மற்றும் வகை பற்றியும் அறிய இயலும். 

Samsung folding display laptop

    Samsung galaxy book fold 17 என்ற பெயரில் சாம்சங் நிறுவனம் ஒரு புதிய மடிக்கணினியை வெளியிடுவதாக அறிவித்துள்ளது. இதில் folding செய்யும் display கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அந்த மடிக்கணினியை இரண்டாக மடித்து உபயோகிக்க முடியும். 

Ola EV Cars 

    Ola நிறுவனம் தனது Ola பைக்கை வெளியிடுவதற்கு தயாராக இருக்கிறது. அதற்கான அனைத்து வேலைகளும் முடிந்து அடுத்த மாதம் விற்பனைக்கு வருகிறது. இந்த நிலையில் Ola car வெளியிட திட்டமிட்டிருப்பதாக அந்த கம்பெனி கூறியுள்ளது. இன்னும் இரண்டு வருடங்களில் Ola EV Cars வெளியிடப்படும் என அறிவித்துள்ளது. 
Ola EV Cars

Samsung tab S7 FE 

    சாம்சங் நிறுவனம் Samsung galaxy tab S7 FE என்ற புதிய மாடல் tablet-யை இந்தியாவில் அறிமுகப் படுத்தியுள்ளனர். Snapdragon 778 என்ற மிகவும் அருமையான செயல் திறனைக் கொண்ட இந்த டேப்லட் 42,000 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. மேலும் 10000mAh பேட்டரி, 10.5 இன்ச் டிஸ்ப்ளே ஆகியவை கொண்டுள்ளது. 

Google chip on Chromebook 

    Chromebook-ல் இனிவரும் காலத்தில் கூகுள் நிறுவனம் தனது own chip-யை செயல்படுத்துவதாக அறிவித்துள்ளது. மேலும் பல்வேறு சிறப்பு அம்சங்களை இந்த Chromebook-ல் கொண்டு வருவதாக கூறப்படுகிறது. இன்னும் ஓரிரு மாதங்களில் இந்த மாற்றம் செயல்படுத்தப்படும் என கூகுள் நிறுவனம் கூறியுள்ளது. 

Introduce 2 Camera sensor

    சாம்சங் தற்போது 2 புதிய கேமரா சென்சார்களை வெளியிட்டுள்ளது. அதில் ஒன்று 200MP கேமிராவும், மற்றொன்று 50MP கேமிராவும் ஆகும். மேலும் 200MP கேமிராவில் 8K தரத்தில் வீடியோ மற்றும் புகைப்படம் எடுக்க முடியும் என சம்சங் தரப்பில் கூறப்படுகிறது. 

Flipkart carnival sale 

    Flipkart செயலியில் தற்போது carnival sale என்று சலுகைகள் பல கொண்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது. எனவே மொபைல் வாங்கும் வாடிக்கையாளர்கள் இந்த நேரத்தில் வாங்கினால் தள்ளுபடியுடன் வாங்க இயலும் என Flipkart நிறுவனம் கூறியுள்ளது. குறிப்பாக Apple iPhone வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு சிறப்பு சலுகைகள் இருக்கிறது என கூறப்பட்டு வருகிறது. இந்த சலுகை செப்டம்பர் 2 முதல் செப்டம்பர் 8 வரை இருக்கிறது.


You have to wait 15 seconds.

Please Wait Next Post...

2 Comments

Post a Comment

Previous Post Next Post