ஒவ்வொரு வாரமும் ஞாயிற்றுக் கிழமை கிரிக்கெட் விளையாடுவது எங்களது வழக்கம். அந்த நிலையில் அன்று காலை 10 மணி அளவில் நானும் எனது நண்பர்கள் ஒரு சிலர் மைதானத்திற்கு வந்தடைந்தோம். அதன் பிறகு எனது நண்பன் ஒருவன் பிற நண்பர்களுக்கு கைப்பேசி மூலம் அழைத்து மைதானத்திற்கு கிரிக்கெட் விளையாட வரச்சொன்னான். அதன் பிறகு பத்து முப்பது மணி அளவில் கிரிக்கெட் விளையாட ஆரம்பித்தோம். டாஸ் ஜெயித்த நாங்கள் பேட்டிங்கை தேர்வு செய்தோம். அதன் பின்னர் பேட்டிங் விளையாட ஆரம்பித்தோம். ஐந்து ஓவர்களுக்கு முப்பத்தி ஆறு ரன்கள் அடித்தோம். அதன் பின்னர் 37 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்கோடு களமிறங்கியது எதிரணி.
முதல் ஓவரை நான் வீசி வெறும் 3 ரன்கள் கொடுத்து ஒரு விக்கெட்டை வீழ்த்தினேன். இவ்வாறு 5 ஓவர் முடிவில் எதிரணி இருபத்து ஆறு ரன்கள் குவித்து ஆட்டமிழந்தது. முதல் ஆட்டத்திலேயே 10 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது எங்கள் அணி. இதேபோல் அன்று 6 ஆட்டங்கள் ஆடினோம் இதில் நாங்கள் ஐந்து வெற்றிகளைப் பெற்றோம். ஒரு ஆட்டத்தில் மட்டும் எதிர் அணி வெற்றி பெற்றது. அதன் பின்னர் வீட்டிற்கு வந்து முகம் கால் கைகளை கழுவிக்கொண்டு மதிய உணவை உண்டேன்.
அதற்குப் பிறகு பக்கத்து ஊருக்குச் சென்று அங்குள்ள கிணற்றில் நானும் நண்பர்களும் குளிக்கச் சென்றோம். சுமார் இரண்டு மணி நேரம் கிணற்றில் நீச்சல் அடித்துக் கொண்டு விளையாடுவோம். அதன் பிறகு மீண்டும் வீட்டிற்கு வந்து துணிகளை மாற்றிக் கொண்டு 3 மணி அளவில் கிரிக்கெட் விளையாட சென்றோம். மொத்தம் 5 ஆட்டங்கள் ஆடினோம் அதில் மூன்றில் நாங்கள் வெற்றி பெற்றோம், இரண்டில் தோல்வியுற்றம். அதன் பிறகு வீட்டிற்கு வந்து மீண்டும் குளித்துவிட்டு, ஏழு முப்பது மணிக்கு ஐபிஎல் போட்டியை பார்ப்பேன். அதன் பிறகு 12 மணி அளவில் தூங்கச் செல்வேன். சிறிது நேரம் கைபேசி உபயோகித்துவிட்டு அதன் பிறகு தூங்க ஆரம்பிப்பேன். ஆனால் சுமார் ஒரு மணி நேரம் தூக்கமே வராது. இதன்பிறகு தன்னையும் அறியாமல் தூங்கி விடுவேன்.
அடுத்த நாள் விடியலை நோக்கி நானும் என்னைப் போன்ற உள்ள என் நண்பர்களும் தூங்குவார்கள்.
Nice
ReplyDeletePost a Comment