Apple launch event 

    தனது Launch Event-யை இந்த மாதம் செப்டம்பர் 14ஆம் தேதி வைக்கப் போவதாக ஆப்பிள் தரப்பில் இருந்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப் பட்டுள்ளது. ஆனால் அந்த வெளியீட்டு விழாவில் எந்தெந்த மாடல் மொபைல்களை வெளியிடப்படும் எனக் கூறப்படவில்லை. ஏறத்தாள iPhone 13 மாடல் மொபைல் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Samsung galaxy note Renew 

    சாம்சங் நிறுவனம் Samsung galaxy notes series-களுக்கான trademark renewal செய்யவில்லை என செய்திகள் வந்துள்ளன. மேலும் Samsung M series, A serious, S series போன்ற பல மாடல்களுக்கு trademark renewal செய்துள்ளதாம். ஆனால் note seriesகளுக்கு செய்யவில்லை. எனவே இனி சாம்சங் தரப்பிலிருந்து நோட்ஸ் வருவது மிகக் கடினம். மேலும் Snapdragon 898 செயல்திறனில் Samsung s22 என்ற புதிய மாடல் மொபைலை இந்தியாவில் வெளியிட உள்ளனர். 

Poco X3 pro Blasted 

    சமீப காலமாகவே அதிகப்படியான மொபைல்போன்கள் வெடித்துக் கொண்டு வருகின்றன. இந்த நிலையில் Poco X3 pro என்ற மாடல் மொபைல் வெடித்து விட்டது என செய்திகள் பரவி வருகின்றன. ஆனால் Poco தரப்பிலிருந்து எந்த ஒரு செய்தியும் அதிகாரபூர்வமாக வரவில்லை. இந்தச் செய்தி சாதாரணமாக இணையத்தில் வெளியிடப்பட்ட செய்தி ஆகும்.

Xiaomi Pure Mode 

    Xiaomi நிறுவனம் தனது மொபைல்களில் Pure Mode என்ற புதிய அம்சத்தை கொண்டு வரப்போவதாக கூறுகிறது. இந்த pure mode இருப்பதால் உங்கள் நண்பர்கள் மொபைலில் இருந்து உங்கள் மொபைலுக்கு எந்த ஒரு செயலிகளும் அனுப்ப முடியாது. உங்களுக்கு தேவையான செய்திகளை நீங்களேதான் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். இந்த pure mode அம்சத்தை பாதுகாப்பு செயலுக்காக கொண்டுவர போவதாக கூறப்படுகிறது. 

Jeff Bezos- Altos Lab 

    Jeff Bezos ஒரு நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளார். அந்த நிறுவனத்தின் பெயர் Altos Lab. இந்த Altos Lab-ல் மனிதர்களுக்கு வயதாகாமல் அவர்களின் வாழ்நாளை உயர்த்துவதற்கான ஆய்வுகள் நடைபெறுவதாக சொல்லப்படுகிறது. மேலும் இந்த நிறுவனத்தில் பல கோடீஸ்வரர்கள் முதலீடு செய்துள்ளனர். 
Jeff Bezos

Netflix- WWE 

    நெட்பிளிக்ஸ் மற்றும் WWE ஆகிய இரு நிறுவனங்கள் மீண்டும் இணைந்துள்ளன. இதற்கு முன்னதாக Big Show-வை வைத்து இந்த இரு நிறுவனங்களும் ஒரு நிகழ்ச்சியை நடத்தி வந்தது. ஆனால் அந்த சண்டை நிகழ்ச்சி தோல்வியில் முடிந்ததால், அதனை கைவிட்டனர். அதன் பின் மீண்டும் தற்போது கை சேர்ந்து Undertaker-யை வைத்து ஒரு சண்டை நிகழ்ச்சியை தொடங்குவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியின் பெயர் escape the Undertaker. மேலும் இந்த சண்டை நிகழ்ச்சி திகில் கலந்த திரில்லர் நிகழ்ச்சியாக கொண்டு வரப்போவதாக இரு நிறுவனங்களும் கூறியுள்ளன.


You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post