நடிகர் மாதவன் சமீபத்தில் மாறா, விக்ரம் வேதா போன்ற படங்களில் நடித்து தனது நடிப்பை வெளிப்படுத்தினார். இவர் அக்காலம் முதல் இக்காலம் வரை பல படங்களில் நடித்துள்ளார். அக்காலத்தில் அலைபாயுதே, மின்னலே, குரு, பிரியமான தோழி, ரன், வேட்டை, ஜீரோ, பார்த்தாலே பரவசம், ஆரியா, எதிரி, தம்பி, டும் டும் டும் மற்றும் பிரியசகி போன்ற பல படங்களில் கதாநாயகனாக நடித்துள்ளார். இதன்மூலம் தன் நடிப்பை வெளிப்படுத்தி வெற்றியை கண்டுள்ளார். இவருக்கென தனி ஒரு ரசிகர்கள் கூட்டம் உண்டு. இவரது பாடல்கள் மெய்சிலிர்க்கும் வகையில் இருக்கும். 

Actor Madhavan

    இவர் தற்போது லிங்குசாமி இயக்கத்தில் நடிக்க உள்ளார். அதாவது தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வெளியாகும் புதிய படத்தில் நடிகர் மாதவனை வில்லனாக நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. நடிகர் மாதவன் சமீபத்தில் ராக்கெட்ரி என்னும் படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். இந்தப் படம் தமிழ், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் மொழிகளில் வெளியாக உள்ளது‌. இந்த நிலையில் லிங்குசாமி இயக்கத்தில் ராம் குந்தநேனி கதாநாயகனாக நடிக்கும் படத்தில் வில்லனாக நடிக்க மாதவனை தேர்வு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இந்தப் படம் தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தின் கதையானது நடிகர் மாதவனுக்கு பிடித்துள்ளதாகவும் அவர் நடிக்க சம்மதம் கொடுத்ததாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன. எனவே இப்படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டதாக நடிகர் மாதவன் கூறியதாக படக்குழு அறிவித்துள்ளது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

1 Comments

Post a Comment

Previous Post Next Post