Facebook new update 

    விடியோ மற்றும் வாய்ஸ் Call-லை இனி பேஸ்புக் செயலிலேயே உபயோகிக்க முடியும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. இதற்கு முன்னதாக messenger செயலி மூலம் வீடியோ மற்றும் வாய்ஸ் Call-லை செய்து கொண்டிருந்தோம். எனவே இரண்டு செயலிகள் உபயோகிக்க மிகவும் சிரமமாக இருப்பதால் அதனை ஒரு செயலியில் கொண்டு வருவதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. 

Tata Punch SUV 

    டாடா நிறுவனத்தின் அடுத்த மாடல் காரின் விவரங்களை அந்த கம்பெனி வெளியிட்டுள்ளது. அதாவது Tata Punch என்ற பெயரில் SUV காராக தயாராகி வருகிறது என கம்பெனி தரப்பில் இருந்து கூறப்பட்டு வருகிறது. தற்போது Tata Nexon மாடல் காரை வெளியிட்ட நிலையில், இதற்கு அடுத்த மாடலாக இந்த காரை வெளியிட உள்ளனர். இந்தக் கார் Nexon மாடலுக்கு சின்ன மாடலாக தயாரிக்கப்பட்டு வருகிறது என செய்திகள் வருகிறது. இதன் ஆரம்ப விலை 5 லட்சமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் Tata Nexon மற்றும் Tata Punch ஆகிய இரு கார்களும் உருவத்திலும், வடிவத்திலும் ஏறத்தாள ஒரே மாதிரியாகத்தான் இருக்கும் என கூறப்படுகிறது. 
Tata Punch SUV

Maruti Suzuki self charging cars 

    மாருதி நிறுவனம் டொயோட்டோ உடன் இணைந்து self charging hybrid cars தயாரிப்பதற்கு திட்டம் வைத்திருப்பதாக கூறியுள்ளது. மாருதி நிறுவனத்தின் மிகப்பெரிய விற்பனையாக இந்தியா விளங்குகிறது. எனவே இந்தத் திட்டம் செயல்படுத்தினால் இந்தியாவில் இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப் படுகிறது. 

Swiss merchants to accept cryptocurrency 

    சுவிட்சர்லாந்தில் 85 ஆயிரம் வணிகர்கள் கிரிப்டோகரன்சியை ஏற்றுக் கொள்வதாக அந்த நாட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. ஆனால் எந்தெந்த கிரிப்டோகரன்சிகளை ஏற்றுக் கொள்வதாக அறிவிக்கவில்லை. உலகில் அதிக கிரிப்டோகரென்ஸி உபயோகிக்கும் நாடாக சுவிட்சர்லாந்து இருப்பதால் இதற்கு அந்த அரசு அனுமதி அளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் நமது நாட்டின் கருப்பு பணமும் அங்கு இருப்பதாக ஒரு செய்தி பல வருடங்களாக பேசப்பட்டு வருகிறது.

Oil Eating Bacteria 

    கடலில் ஏற்படும் விபத்துக்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து வரும் எண்ணெய் கப்பல்களில் இருந்து எண்ணெய் கடலில் கலக்கிறது. இதனால் கடல்வழ் உயிரினங்கள்
 அதிகம் பாதிப்பு அடைகிறது. இதனை சரிசெய்யும் விதமாக தற்போது எண்ணெயை உட்கொள்ளும் பாக்டீரியாவை கண்டுபிடித்து வருகிறார்கள். இந்த ஆய்வு 75% முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. 

iPhone Super News 

    ஒரு விமானி 11,500 அடி உயரத்தில் ஒரு விமானத்தை ஓட்டிச் சென்று கொண்டிருந்தபோது, தனது iPhone 10 மொபைலில் புகைப்படம் எடுக்க முயற்சிக்கும் போது ஜன்னல் வழியாக மொபைல் கீழே விழுந்துவிட்டது. சுமார் 11,500 அடி மேல் இருந்து விழுந்த அந்த மொபைலுக்கு எந்த ஒரு பாதிப்பும் கீறலும் இல்லாமல் தரையில் விழுந்து கிடந்ததாம். உண்மையில் அந்த விமானியின் மொபைலுக்கு அதிர்ஷ்டம் அடித்து இருக்கிறது என்று தான் கூற வேண்டும். 



You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post