நமது இந்தியாவில் மாணவர்களின் நலன் கருதி பன்னிரண்டாம் வகுப்பு சிபிஎஸ்சி பயிலும் மாணவ மாணவர்களின் பொதுத்தேர்வை பிரதமர் நரேந்திர மோடி ரத்து செய்துள்ளார். இதைத் தொடர்ந்து வட இந்தியாவில் உள்ள ராஜஸ்தான் அரசு தனது மாநிலத்தில் பயிலும் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவ மாணவிகளின் பொதுத்தேர்வை ரத்து செய்வதாக அறிவித்துள்ளது. மேலும் கொரோனா பரவல் காரணமாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற உயர்மட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்தியாவில் சிபிஎஸ்சி பயிலும் மாணவர்களின் தேர்வு ரத்து செய்யப்பட்டது. மேலும் குஜராத், மத்திய பிரதேசம் மற்றும் உத்தரகண்ட் ஆகிய மாநிலங்கள் பன்னிரண்டாம் வகுப்பு தேர்வை ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன் பின்னர் சில நாட்கள் கழித்து ஹரியானா மற்றும் கோவா மாநில அரசும் 12 ஆம் வகுப்பு தேர்வை ரத்து செய்துள்ளது.
தற்போது தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வு நடத்த முடியாத நிலையில் இருக்கின்றனர். எனவே தேர்வு நடக்குமா நடக்காதா என்று தெரியவில்லை. மேலும் தமிழக கல்வி துறை தேர்வு வேண்டுமா வேண்டாமா என்று வாக்கெடுப்பு எடுத்து வருகிறது. இதில் தேர்வு வேண்டாம் என்று அதிகபட்சமான மாணவர்களும் பெற்றோர்களும் கூறியுள்ளனர். ஏனெனில் தற்போது கொரோனா நோயால் தமிழகம் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த நிலையில் தேர்வுகள் நடத்துவது இயலாத காரியம். இன்னும் சில மாதங்களில் கொரோனா தொற்று குறைந்தால் தெருவில் நடக்கலாம் மற்றபடி தெருவில் நடப்பது கேள்விக்குறிதான். இதற்கான முடிவை இன்னும் ஒரு வாரத்தில் எடுக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் கூறியுள்ளார். இதற்கு அனைத்து மாணவ மாணவிகளும் அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
Super
ReplyDeleteGood
ReplyDeletePost a Comment