நடிகர் சூர்யா சமீபத்தில் நடித்த சூரரைப்போற்று படம் மெகா ஹிட்டை கொடுத்தது. இப்படமானது அமேசான் பிரைமில் வெளியிடப்பட்டு ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை பெற்று வெற்றிபெற்றது. இப்படம் திரையரங்கில் வெளியாகி இருந்தால் பல கோடி லாபம் பெற்று இருக்கும் என கருதப்படுகிறது. மேலும் இவர் காப்பான், சிங்கம், 24, அஞ்சான், மாசு, என் ஜி கே, அயன், ஜில்லுனு ஒரு காதல், கஜினி, ஏழாம் அறிவு, தானா சேர்ந்த கூட்டம், வேல் மற்றும் மாற்றான் போன்ற பல படங்கள் நடித்துள்ளார். இந்தப் படங்களின் மூலம் பிரபல நடிகராக தமிழ் திரையுலகில் தொடர்ச்சியாக இருந்து வருகிறார். மேலும் இவர் பல பொது சேவையில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த நிலையில் ஊரடங்கில் வாழ்வாதாரம் பாதித்த தன் ரசிகர்களின் 250 குடும்பத்திற்கு நடிகர் சூர்யா கொரோனா நிவாரண நிதி உதவி வழங்கியுள்ளார். தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் சூர்யா, அகரம் பவுண்டேஷன் மூலமாக ஏழை எளிய மாணவர்களுக்கு இலவசமாக கல்வியை கொடுத்து வருகிறார். மேலும் தன் நடிப்பின் மூலம் வரும் பணத்தை அவ்வப்போது சமூக சேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார். இந்தநிலையில் வாழ்வாதாரம் பாதித்த ரசிகர் மன்றத்தில் பணியாற்றி வரும் 250 பேருக்கு தலா ஐந்தாயிரம் ரூபாய் என்ற விதமாக நிதி வழங்கியுள்ளார். இந்த நிதியை தன் ரசிகர்களின் வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது. சூர்யாவின் இந்த சேவைக்கு பல பிரமுகர்கள் சமூக வலைத்தளத்தில் பாராட்டி வருகின்றனர்.
நடிகர் சூர்யா அதிக அளவு பிறருக்கு உதவி புரியும் எண்ணம் கொண்டவர். இவர் சமீபத்தில் கொரோனா நிவாரணமாக தமிழ்நாட்டின் முதல் அமைச்சரிடம் ஒரு கோடி ரூபாய் வழங்கி உள்ளார். மேலும் இவரின் தம்பியாகிய நடிகர் கார்த்தியும் பல உதவிகளை பொதுமக்களுக்கு செய்து வருகிறார். இவர்கள் இரண்டு பேரும் செய்யும் இந்த நற்செயலுக்கு பல பிரபலங்கள் பாராட்டி வருகின்றனர்.
Post a Comment