தல அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் வலிமை. இந்தப் படத்தை எச் வினோத் இயக்கி வருகிறார். மேலும் இப்படத்தை போனிகபூர் தயாரித்துள்ளார். இந்த படத்தில் அஜித் மற்றும் ஹூமா குரேஷி ஆகியோர் முக்கியமான வேடத்தில் நடித்துள்ளனர். மேலும் இந்த படத்தில் தெலுங்கு நடிகர் கார்த்திகேய கும்பகோண்டா, பியர்லி மானே ஆகிய பல பிரபலங்கள் நடித்துள்ளனர். இதற்கு யுவன் சங்கர்ராஜா இசை அமைக்க உள்ளார். மேலும் இப்படத்திற்கு நீரவ்ஷா ஒளிப்பதிவு செய்து வருகிறார். இந்த நிலையில் வலிமை படத்தின் ஒரு அப்டேட் வெளியாகி உள்ளது. அதாவது இந்த படத்தின் ஒரு சண்டைக்காட்சி வெளிநாட்டில் எடுக்கப்பட்டதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் மீண்டும் படப்பிடிப்புகள் தூங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது. 

    இதுவரை எடுக்கப்பட்ட காட்சிகளின் டப்பிங் முடிந்த நிலையில் இந்தப் படம் விரைவில் வெளியாகும் என கூறப்பட்டு வந்தது. தற்போது இந்தப் படம் தீபாவளிக்கு வெளியாக வாய்ப்புள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே தல ரசிகர்கள் மகிழ்ச்சியின் உச்சத்தில் இருப்பதாக கூறுகின்றனர். சமீப காலமாகவே "வலிமை அப்டேட்" என சமூக வலைத்தளங்கள் மற்றும் இதர ஊடகங்களில் தல ரசிகர்கள் கேட்டு வந்த நிலையில் தற்போது இந்த நிகழ்வு அவர்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை தரும். மேலும் இதற்கு தல ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டிருப்பதாக சமூக வலைத்தளங்களில் செய்திகள் பரவிக் கொண்டிருக்கின்றன. 

     கடந்த இரண்டு வருடங்களாக அஜித்தின் எந்த ஒரு படமும் வெளியாகாத நிலையில் தற்போது வலிமை படம் தயாராகிக் கொண்டிருக்கிறது. எனவே இந்தப் படத்திற்கு அவரின் ரசிகர்களும் திரைப்பட ஆர்வலர்களும் ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர்.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

Previous Post Next Post