Germany wants 7 years of software updates 

    ஜெர்மனி பெடரல் அரசாங்கம் தற்போது ஒரு புதிய திட்டத்தை நிறைவேற்ற உள்ளார்கள். இதில் புதிதாக வெளியிடப்படும் மொபைல்களுக்கு 7 வருடம் பாதுகாப்பு செயலை மேற்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப் பட்டுள்ளது. மேலும் ஒரு மொபைல் வெளியிடப்பட்டால் அதற்கான உதிரி பாகங்களும் ஏழு வருடத்திற்கு கம்பெனி சார்பாக கொடுக்கப்பட வேண்டும் எனவும் அதில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு இந்தியாவிலும் கொண்டு வந்தால் மிகவும் சிறப்பாக இருக்கும். மேலும் அடிக்கடி மொபைலை மாற்றுவது இதனால் குறையும்.  
Germany new rules

IQOO Z5 Series 

    மிகவும் புகழ் வாய்ந்த இணையதளத்தில் IQOO நிறுவனம் தனது அடுத்த மாடல் மொபைல்களான IQOO Z Series மொபைல்களை வெளியிடத் திட்டமிட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதில் குறிப்பாக Z5 Series வெளியிடப்போவதாக இணையத்தில் செய்திகள் வந்துள்ளன. இந்த முறை இந்த நிறுவனத்தில் இருந்து மூன்றும் புதிய மாடல் மொபைல்கள் வர வாய்ப்பிருப்பதாக கூறப்படுகிறது. 

iPhone 13 leo satellite communication 

    சமீபத்தில் iPhone 13 மொபைலில் network இல்லாமல் பிறருக்கு அவசர வேலைகளில் call செய்யலாம் என்று அந்த நிறுவனம் சார்பாக கூறப்பட்டு வந்தது. ஆனால் தற்போது நாங்கள் ஒரு சில நாடுகளுக்கும் ஒரு சில மாடல்களுக்கும் மட்டுமே இந்த சிறப்பம்சத்தை கொடுப்போம் என கூறியுள்ளது. எனவே இந்த மொபைல் ஒரு செயற்கைக்கோள் மொபைல் ஆக எண்ண வேண்டாம் என கூறப்பட்டுள்ளது. 

WhatsApp new feature spotted 

    வாட்ஸ் அப் செயலியில் ஒரு புதிய future கொண்டு வருவதாக அந்த நிறுவனம் சமூக வலைத்தளங்களில் கூறி வருகிறது. அதாவது உங்களுக்கு ஏற்றவாறு உங்களின் profile-யை hide செய்து கொள்ளலாம். 
       1. Last seen 
       2. Profile photo 
       3. About status 
ஆகியவற்றை உங்களுக்கு ஏற்றவாறு hide செய்து கொள்ளலாம். 

Potentially Hazardous Asteroid 

    2021 NYN என்ற பெயரில் ஒரு கோள் சீக்கிரமாகவே பூமிக்கு மிக அருகில் வரப்போவதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். மேலும் இந்த கோள் மிகவும் ஆபத்தான எரிகோளாக பூமியை நோக்கி வரப் போவதாக கூறப்படுகிறது. ஆனால் இந்தக் கோள் அதிகபட்சமாக பூமியை நெருங்க வாய்ப்புள்ளது. எனவே இந்த ஏறிக்கோள் பூமியில் விழுந்தால்
 மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
 

Benz Vision AVTR 

    Benz நிறுவனம் தனது Benz Vision AVTR என்ற மாடல் காரை கடந்த வருடமே வடிவமைத்து இருப்பதாக அறிவித்து இருந்தனர். இந்த நிலையில் மீண்டும் ஜெர்மனியில் இந்த காரின் சிறப்பம்சங்களை விளக்கமாகக் கூறும் நிகழ்ச்சி நடைபெற்றுள்ளது. இந்த காரில் ஒரு புதிய சிறப்பு அம்சம் இருப்பதாக கூறப்படுகிறது. அது என்னவென்றால் உங்களின் மூளையின் யோசனை திறனுக்கு ஏற்றவாறு இந்த கார் செயல்படும் என அந்த நிறுவனம் கூறியுள்ளது. எனவே இந்த கார் பாதுகாப்பாக இருந்தால் நல்லது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

أحدث أقدم