Samsung invest on Texas 

    அமெரிக்காவின் டெக்சாஸ் நகரில் ஒரு லட்சத்து 25 ஆயிரம் கோடி ரூபாயை முதலீடு செய்வதாக சாம்சங் நிறுவனம் கூறியுள்ளது. சாம்சங் நிறுவனம் தனது மொபைலின் செயல்திறனை அதிகரிக்க புதிய chip-யை உற்பத்தி செய்ய உள்ளது. இதனை அமெரிக்காவில் உள்ள டெக்சாஸ் நகரில் தொழிற்சாலை ஒன்று நிறுவப்பட்டு, அதில் தயாரிக்கப்பட்டு வரும் நோக்கில் அங்கு முதலீடு செய்ததாக அந்த நிறுவனம் கூறியுள்ளது. மேலும் அமெரிக்காவில் சாம்சங் நிறுவனத்திற்கு குறைந்த அளவு வரியும், தள்ளுபடி கொடுப்பதாக கூறப்படுகிறது. 

Xiaomi global event  

    Xiaomi நிறுவனத்தின் உலகளாவிய நிகழ்ச்சி செப்டம்பர் 15ஆம் தேதி நடைபெறுவதாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சியில் நமக்குத் தெரியாத சில மொபைல்களும் எலக்ட்ரிக் பொருட்களும் வெளியிட உள்ளதாக கூறப்பட்டு வந்தது. தற்போது அந்த நிகழ்ச்சியில் வெளியிடப்படும் மொபைல்களின் விவரங்கள் இணையத்தில் கசிந்து வருகிறது. அதாவது xiaomi 11T என்ற மொபைல் 120W hyper power charge என்ற fast charger உடன் வருகிறதாம். 

Jio completed 5 years

    ஜியோ நிறுவனம் இந்த வருடம் செப்டம்பர் 5ஆம தேதியுடன் தனது ஐந்து வருட பயணத்தை வெற்றிகரமாக முடித்துவிட்டது. மேலும் மிகப்பெரிய இணையத்தள உரிமையாளர்களும் மற்றும் தொழில்நுட்ப உரிமையாளர்களும் ஜியோ நிறுவனத்திற்கு தனது வாழ்த்துக்களை சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ளார்கள். ஏன்னென்றால் ஐந்து வருடத்திற்கு முன்பு இணையத்தை பயன்படுத்தும் பயனாளர்களின் எண்ணிக்கையும், நேரமும் குறைவாக இருந்தது. ஆனால் தற்போது இந்த அளவிற்கு உயர்ந்து இருக்கிறது என்றால் அதற்கு ஜியோ நிறுவனம் தான் காரணம்.
Jio

Gofuel introduce charging solution for EVs

    Gofuel என்ற நிறுவனம் இனிவரும் காலங்களில் எலெக்ட்ரிக் பைக்குகளும் கார்களும் தான் வரப்போகிறது என்பதை புரிந்து கொண்டு ஒரு புதிய முயற்சியில் தனது தடத்தை பதித்துள்ளனர். அதாவது உங்கள் வண்டியில் ஓர் இடத்திற்குச் சென்று கொண்டிருக்கும்போது எலக்ட்ரிக் ஆற்றல் தீர்ந்துவிட்டால் எங்களுடைய நிறுவனத்தை தொடர்பு கொண்டால், உங்களுக்கு நீங்கள் இருக்கும் இடத்திற்கு ஒரு வண்டியின் மூலம் வந்து உங்களுக்கு charge செய்து தரப்படும் என கூறியுள்ளது. மேலும் charge செய்ய நேரம் வீணாகுது என்றால் நாங்கள் பேட்டரிகளை மாற்றித் தருகிறோம் என்று கூறுகிறார்கள். 

Soup to diesel manufacture 

    ஜப்பானில் கடைகளில் விற்கப்படும் சூப்களை வாடிக்கையாளர்கள் அதிக அளவு வீணாக்குவதால் அதனை ஆராய்ச்சியாளர்கள் டீசல் ஆக மாற்றியுள்ளனர். மேலும் இதனை வைத்து சுமார் 170 வண்டிகளை இயக்க வைப்பதற்கான முயற்சி வெற்றிகரமாக முடிவடைந்துள்ளது என கூறப்பட்டு வருகிறது. 

Hacker top security job 

    சமீபத்தில் ஒரு cryptocurrency exchange செய்யும் இணையத்தை ஒரு நபர் hack செய்து இருந்தார். அந்த இணையத்தள கம்பெனி தற்போது அந்த நபரை தனது கம்பெனிக்கு டாப் செக்யூரிட்டி வேலைக்கு வருமாறு கேட்டுக் கொண்டுள்ளனர். அதற்கு அந்த நபர் இல்லை என்னால் வர இயலாது என கூறியுள்ளார்.


You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

أحدث أقدم