அமெரிக்காவில் கொரோனா தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் அந்நாட்டு மக்களுக்கு துப்பாக்கி பரிசாக வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இதனை அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாகாணத்தின் கவர்னர் ஜிம் ஜெஸ்டிஸ் அறிவித்துள்ளார். கொரோனா தொற்றின் கோரத்தாண்டவத்தில் சிக்கிய அமெரிக்கா தற்போது அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போடும் பணியில் அதிகம் ஆர்வம் காட்டி வருகிறது.
இந்நிலையில் இளைஞர்கள் தடுப்பூசியைப் போட்டுக் கொள்வதை ஊக்குவிப்பதற்காக அந்நாட்டின் பல்வேறு மாகாணங்கள் பல்வேறு பரிசு பொருட்களை வழங்கி வருகிறது. இதில் மேற்கு வர்ஜீனியாவை சேர்ந்த கவர்னர் ஜிம் ஜெஸ்டிஸ் வினோதமான அறிவிப்பு ஒன்றை அறிவித்துள்ளார். அதில் 1588 மில்லியன் மதிப்பிலான பரிசுத்தொகையை அறிவித்துள்ளார். அந்தப் பரிசுப் பொருட்களில் துப்பாக்கிகளும் அதற்கு தேவையான தோட்டாக்களும் தருவதாக கூறியுள்ளார். இந்த பரிசானது ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை மட்டுமே கொடுக்கப்படும் என அறிவித்துள்ளது. மேலும் அந்தப் பரிசில் உயர்கல்விக்கான ஊக்கத்தொகை மற்றும் வாழ்நாள் முழுவதும் வேட்டையாடும், மீன் பிடிக்கும் போன்ற பல செயல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்காவில் வசிக்கும் இளைஞர்கள் தடுப்பூசியைப் போட்டுக்கொள்ள அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர். மேலும் இந்தப் பரிசுப் பொருள் திட்டத்தை பல நாடுகள் பின்பற்றி வருகிறது. இதன்மூலம் கொரோனா நோய் இல்லாத நாட்டை மிக விரைவில் உருவாக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை அமெரிக்கா முதன் முதலில் தொடங்கி வைத்தது பாராட்டத்தக்க ஒரு செய்தியாகும்.
Nice
ردحذفSuper
ردحذفSuper
ردحذفإرسال تعليق