Google paid 1 lakh crore to Apple
கூகுள் நிறுவனம் தனது search engine-யை ஆப்பிள் மொபைல்களில் default-ஆக வைக்க ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி ரூபாயை கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த வருடம் கூகுள் நிறுவனமும், ஆப்பிள் நிறுவனமும் ஒரு புதிய ஒப்பந்தத்தை போட்டுள்ளனர். இந்த ஒப்பந்தத்தில் கூகுள் நிறுவனம் 1,10,000 கோடி ரூபாயை ஆப்பிள் நிறுவனத்திற்கு கொடுத்துள்ளது. ஆப்பிள் மொபைல்களில் சர்ச் இன்ஜன் ஆக வைக்க ஒரு லட்சத்து பத்தாயிரம் கோடி கொடுத்துள்ளது கூகுள்.
Oppo Tablet Soon
சமீபத்தில் ஒன் பிளஸ் மற்றும் ரியல்மீ நிறுவனங்கள் தனது டேப்லெட் வெளியீடு பற்றிய செய்திகளை தனது சமூக வலைத்தளத்தில் பக்கத்தில் வெளியிட்டார்கள். அந்த வகையில் தற்போது ஓப்போ நிறுவனமும் டேப்லெட்டை வெளியிடுவதாக தனது வலைத்தளத்தின் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இந்த Tablet மிகவும் வித்தியாசமாக Color OS மூலம் நாங்கள் கொண்டு வரப் போகிறோம் எனவும் oppo கூறியுள்ளது. மேலும் எங்களால் முடிந்த வரை மிகவும் குறைந்த விலையில் கொண்டு வர முயற்சி செய்கிறோம் எனவும் கூறியுள்ளது.
Apple iPhone 13 launch
ஐபோன் நிறுவனம் தனது புதிய மாடல் iPhone 13 மொபைலை கூடிய விரைவில் வெளியிடுவதாக கூறியிருந்தது. இந்த நிலையில் தற்போது அந்த மொபைல் வெளியிடும் தேதியை அந்த நிறுவனம் அறிவித்துள்ளது. அதாவது செப்டம்பர் 17ஆம் தேதி இந்த மொபைலை வெளியிடுவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
3D இறைச்சி
ஒசாக்கா யுனிவர்சிட்டியில் ஒரு மாட்டு இறைச்சியின் செல் எடுத்து அதை செயற்கை முறையில் வளர வைத்து, அதனை பிரிண்ட் செய்து, அதன் பின்னர் அதனைச் சமைத்துள்ளனர். இவ்வாறு அனைத்து இறைச்சிகளும் வந்தால் மனிதனுக்கு ஆயுட்காலம் குறைவது உறுதி. நமது உலகம் எதை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது என தெரியவில்லை.
New Rechargeable batteries
ஆராய்ச்சியாளர்கள் தற்போது ஒரு புதுவிதமான பேட்டரியை கண்டுபிடித்து வருகிறார்கள். இந்த பேட்டரி தற்போது உள்ள லித்தியம் பேட்டரியை விட ஆறு மடங்கு அதிக செயல்திறன் கொண்டது. எனவே வருங்காலத்தில் இந்த பேட்டரி மொபைல் மற்றும் பல்வேறு மின்சார சாதனங்களின் உபயோகிக்கப்படும் என கூறப்படுகிறது. இதனால் தற்போது உள்ள பேட்டரியை விட ஆறு மடங்கு அதிகம் செயல்திறன் கிடைக்கும்.
Google stop self driving car sensor
கூகுள் நிறுவனத்தின் மற்றொரு இணை நிறுவனம் ஆல்பாபெட். இந்த நிறுவனம் கார்களுக்கு waymo என்ற self driving cars sensor-யை உருவாக்கி விற்பனை செய்து வருகிறது. ஆனால் தற்போது நாங்கள் இனி sensor-யை விற்பனை செய்வதில்லை. அதற்கு பதிலாக நாங்களே இனி இதனை சோதனை செய்து உபயோகிக்க போகிறோம் என கூறியது.
Force Gurkha coming soon
Force Gurkha என்ற நிறுவனம் Mahindra Thar காருக்கு போட்டியாக தனது Gurkha என்ற காரையை வெளியிட உள்ளனர். மேலும் கூடிய சீக்கிரம் இந்த காரை வெளியிடுவதாக அந்த நிறுவனம் கூறியுள்ளது.
Please Wait Next Post...
إرسال تعليق