ராஜமௌலி இயக்கத்தில் பாகுபலி மற்றும் பாகுபலி பகுதி-2 ஆகிய இரண்டு படங்கள் வெளியாகி சூப்பர் ஹிட்டானது. அதன் பின்னர் உலகமே தெலுங்கு சினிமா இயக்குனர் ராஜமௌலியை திரும்பிப் பார்த்து திகைத்து நின்றது. மேலும் இவர் நான் ஈ என்னும் படத்தையும் எடுத்துள்ளார். இந்தத் திரைப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம் போன்ற பல மொழிகளில் சிறந்த படமாக ரசிகர்களிடம் வலம் வந்தது. (Lenova laptop)

    இந்நிலையில் இவர் அடுத்ததாக நடிகர் ராம்சரண் மற்றும் ஜூனியர் என்டிஆர் ஆகியோர் நடிகர்களாக நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். இதன் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கிறது. மேலும் இந்த திரைப்படம் உலகம் முழுவதும் 12 மொழிகளில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்திற்கு RRR என பெயர் சூட்டப்பட்டுள்ளது. பாகுபலி படத்தைத் தொடர்ந்து ராஜமௌலி தற்போது தெலுங்கில் முன்னணி கதாநாயகர்களான ராம்சரன் மற்றும் ஜூனியர் என்டிஆர் வைத்து ரத்தம் ரணம் ரௌத்திரம் என்னும் RRR படத்தை எடுத்து வருகிறார். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஹிந்தி ஆகிய இந்திய மொழிகளிலும், ஆங்கிலம், கொரியன், ஸ்பேனிஷ் போர்டீகிஸ், ஜப்பான் மற்றும் சீன மொழிகளிலும் படத்தை வெளியிட உள்ளனர். 

Ram charan

    தெலுங்கின் முன்னணி நடிகர்கள் இதில் நடித்திருப்பதால் நல்ல ஒரு வெற்றிப்படமாக வருமென ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படமானது தற்போது உள்ள கொரோனா தாக்கம் குறைந்தவுடன் வெளியாகும் என கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தை OTT தளங்களில் வெளியிட வாய்ப்புகள் இல்லை. எனவே எங்கள் படம் திரையரங்குகளுக்கு வரும் வரை காத்திருங்கள் என்று படக்குழு ரசிகர்களிடம் கேட்டுக்கொண்டது. இந்தச் செய்தியை படக்குழு அதிகாரப்பூர்வமாக சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளது.(lenova laptop)
You have to wait 15 seconds.

Please Wait Next Post...

1 Comments

Post a Comment

Previous Post Next Post