சென்னை அறிஞர் அண்ணா வண்டலூர் உயிரியல் பூங்காவில் சிம்பன்சி குரங்கு குட்டியை நின்றதாக பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் கடந்த 2005ஆம் ஆண்டு இணை மனித குரங்குகள் சிங்கப்பூர் உயிரியல் பூங்காவில் இருந்து கொண்டு வரப்பட்டது. இந்த குரங்குகளுக்கு கோம்பி மற்றும் கௌரி என பெயரிடப்பட்டது. மேலும் இந்த விலங்குகள் வண்டலூர் பூங்காவில் பார்வையாளருக்கு கவர்ச்சி அளிக்கும் ஒரு விலங்கு ஆகும். பெரியவர்கள் முதல் சிறிய குழந்தைகள் வரை இந்த சிம்பன்ஸி குரங்கை பார்வையிட வருவார்கள். இந்த சிம்பான்சி குரங்குகள் அடிக்கடி பார்வையாளர்களை மகிழ்ச்சியூட்டும் வகையில் ஒன்றுக்கொன்று விளையாடி மகிழும். 

    கடந்த இரண்டு வருடங்களாக பார்வையாளர்களை அனுமதிக்காத பூங்கா நிர்வாகம் தற்போது ஒரு மகிழ்ச்சி தரும் செய்தியை வெளியிட்டுள்ளது. அதாவது கடந்த ஜூன் 9ஆம் தேதி சிம்பன்சி குரங்கு ஒரு குட்டி சிம்பன்ஸியை ஈன்றுள்ளது என நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் தற்போது தாயும் சேயும் நலமுடன் இருப்பதாகவும் தொடர்ந்து இரு குரங்குகளும் மருத்துவக் கண்காணிப்பில் இருப்பதாகவும் பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. மேலும் சிம்பான்சி குரங்குகள் ஆப்பிரிக்க கண்டத்தில் வாழும் ஒரு விலங்கு ஆகும். இந்த குரங்குகள் தற்போது அழிந்து வரும் நிலையில் இவ்வாறு குட்டிகளை ஈன்று எடுத்தது மகிழ்ச்சியை தருவதாக அனைவரும் கூறி வருகின்றனர். 

    மேலும் வண்டலூர் உயிரியல் பூங்கா மீண்டும் எப்போது திறக்கும் என சுற்றுலா பார்வையாளர்கள் காத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. எனவே கூடிய விரைவில் கொரோனா தொற்று குறைந்து பூங்கா திறக்கும் என அனைவராலும் எதிர்பார்க்கப்படுகிறது.

You have to wait 15 seconds.

Please Wait Next Post...

Post a Comment

أحدث أقدم