சென்னை வண்டலூர் உயிரியல் பூங்காவில் பல்வேறு விலங்குகள் வாழ்ந்து வருகின்றன. இந்த நிலையில் விலங்குகளை தத்து எடுத்து வளர்க்கலாம் என பூங்கா நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது. வண்டலூர் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்காவில் 2382 விலங்குகளும் பறவைகளும் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்த விலங்குகளை பராமரிக்க சுமார் 342 பேர் பணியாற்றி வருகின்றனர். எனவே கடந்த இரண்டு வருடங்களாக ஊரடங்கு காரணமாக சுற்றுலா பயணிகளையும் பொதுமக்களையும் பூங்காவில் அனுமதிக்கவில்லை. இதனால் விலங்குகள் மற்றும் பறவைகளை பராமரிக்க முடியவில்லை என பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது.
இந்நிலையில் வண்டலூர் பூங்காவிற்கு தேவையான நிதியை திரட்டுவதற்காக விலங்குகளை தத்து எடுக்கலாம் என பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. விலங்குகளை தத்து எடுக்கும் திட்டத்தில் குறைந்தபட்சம் நூறு ரூபாய் கொடுத்து விலங்குகளை தத்தெடுக்கலாம் என நிர்வாகம் அறிவித்துள்ளது. இதனால் பொதுமக்களும் விலங்குகள் நல ஆர்வலர்களும் தாராளமாக விலங்குகளை தத்து எடுக்கலாம் என கூறப்படுகிறது. மேலும் ஏற்கனவே கொரானா காரணமாக இரு சிங்கங்கள் இறந்து போனது குறிப்பிடத்தக்கது. எனவே உங்களால் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என பூங்கா நிர்வாகம் கூறியுள்ளது. இதற்கு சேவை புரியும் பல ஆர்வலர்கள் தங்களால் முடிந்த உதவியை செய்து வருகின்றனர்.
வண்டலூர் உயிரியல் பூங்கா தமிழ்நாட்டில் உள்ள மிகப்பெரிய பூங்காவாகும். எனவே இதற்கு அதிக அளவு நிதி தேவைப்படும். இதனால் அனைவராலும் முடிந்த உதவிகளை செய்யுங்கள் என தமிழ்நாட்டின் முதல்வர் ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.
Good
ردحذفSuper
ردحذفإرسال تعليق