தென்னை மரம்
தென்னை மரம் தமிழ்நாட்டில் அதிக அளவு காணப்படும். மேலும் தென்னை மரத்தில் உள்ள பாகங்கள் நமக்கு பயன்படுகின்றன.
தென்னை மரத்தின் பயன்கள்
தென்னை மரத்தின் இலை கூரை வீடு கட்டுவதற்கும், திருமண நிகழ்ச்சிக்கு பந்தல் போடவும் பயன்படுகிறது. மேலும் தென்னை இலை மூலம் வீடு கூட்டும் துடப்பம் செய்ய பயன்படுகிறது. தென்னை மரத்தின் காய்ந்த பட்டைகள், இலைகள் போன்றவை சமையல் செய்வதற்கு பயன்படுகிறது. தென்னை மரத்தில் காய்க்கும் இளநீர் நம் உடலிற்கு நன்மையை உண்டாக்குகிறது. தென்னை மரத்தில் காய்க்கும் தேங்காய், இனிப்பு மற்றும் கார வகை உணவுகளை செய்ய பயன்படுகிறது. தென்னை மரத்தின் குருத்தை உண்பதால் நம் உடலிற்கு மிகவும் நல்லது.
வாழைமரம்
வாழைமரம் விவசாயிகள் பயிரிடும் முக்கியமான வேளாண்மை தாவரமாகும். வாழை மரத்தில் உள்ள பாவங்கள் அனைத்தும் நமக்கு பயன்படுகின்றன.
வாழை மரத்தின் பாகங்கள்:
1) வாழை இலை
2) வாழைப்பூ
3) வாழைக்காய்
4) வாழைப்பழம்
5) வாழைத்தண்டு
வாழை மரத்தின் பயன்கள்
வாழை மரத்தில் உள்ள வாழை இலை உணவு உண்பதற்கு பயன்படுகிறது. மேலும் வாழையிலையில் உணவு உண்பதால் உடலுக்கு நன்மை. வாழை மரத்தில் உள்ள வாழைத்தண்டை சமைத்து சாப்பிடலாம். மேலும் வாழைப்பூவை பொரியல் செய்து சாப்பிட்டால் சிறுநீரக பிரச்சனை சரியாகும். வாழைமரத்தில் உற்பத்தியாகும் வாழைக்காயை சமைப்பதற்கு பயன்படுத்தலாம். வாழை மரத்தில் காய்க்கும் வாழைப்பழம் உண்பதற்கும், நிகழ்ச்சிக்கும் பயன்படுத்தப்படுகிறது.
முருங்கை மரம்
அந்தக் காலத்தில் கிராமங்களில் அதிக அளவில் முருங்கை மரம் காணப்பட்டது. ஆனால் தற்போது முருங்கை மரங்கள் குறைந்துவிட்டன. மேலும் முருங்கை மரத்தின் நன்மைகள் ஏராளம்.
முருங்கை மரத்தின் நன்மைகள்
முருங்கை மரத்தின் இலையில் சமையல் செய்து சாப்பிட்டால் வைட்டமின் இ கிடைக்கிறது. முருங்கை மரத்தில் விடும் முருங்கைக்காய் சமையல் செய்வதற்கு பயன்படுகிறது. மேலும் நாம் அனைவரும் முருங்கைக்காய் மற்றும் முருங்கை இலை போன்றவற்றை ஒரு வாரத்திற்கு ஒரு முறை சேர்த்துக் கொள்வது நல்லது.
நாம் இன்று பார்த்த மூன்று வகையான மரங்களும் நம் வளர்ச்சிக்கு தேவையான ஊட்டச் சத்துக்களை தருகின்றன. எனவே இதை உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது.
Good
ردحذفإرسال تعليق