BMW New Bike
பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது BMW G310 GS என்ற மாடல் பைக்கை குறைந்த விலைக்கு விற்பனை செய்வதாக கூறி உள்ளது. அதாவது இரண்டு லட்சத்து 50 ஆயிரம் முதல் மூன்று லட்சம் வரை இதன் விலை நிர்ணயம் செய்யப்படும் என அறிவித்துள்ளது. விரைவில் இந்தியாவில் விற்பனை செய்வதாகவும், மூன்று வண்ணங்களில் பைக்கை கொண்டு வருவதாக சொல்லப் படுகிறது.
New offer from Government
நமது அரசாங்கம் ஒரு புதிய திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளது. இதன் மூலம் தற்போது தொடங்கும் EV கார், ஹைட்ரஜன் கார் போன்ற நிறுவனங்கள் அதிகம் பயன் பெறலாம். இந்தத் திட்டத்தின் மூலம் 58 ஆயிரம் கோடி ரூபாய் பயன்பெறலாம். அதாவது புதிதாக வரும் நிறுவனங்கள் மற்றும் புதிய தொழில்நுட்பங்கள் கொண்டு துடங்கும் நிறுவனங்களுக்கு மானியம் அளிக்க போகிறோம் என நமது இந்திய அரசாங்கம் கூறியுள்ளது. மேலும் பழைய தொழில்நுட்பம் கொண்ட நிர்ணயிக்கும் குறைந்த அளவு உதவி மற்றும் மானியம் கொடுக்கப் போகிறோம் என அறிவித்துள்ளது.
iPhone sale drops
iPhone 12 மொபைலின் விற்பனை கடந்த ஒரு மாதமாக குறைந்துள்ளது. காரணம் இந்த மாதம் iPhone 13 மொபைல் வெளியிடப்படுவதால், வாடிக்கையாளர்கள் இந்த மொபைலை வாங்க ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் பல்வேறு சலுகைகள் கொடுத்தும் விற்பனை குறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
Lenovo launched laptops
இந்தியாவில் Lenovo IdeaPad slim 5 Pro என்ற மடிக்கணினி(Laptop) வெளியிடப் பட்டுள்ளது. இதன் ஆரம்ப விலையே 77 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது இரண்டு பிரிவுகளில் கிடைக்கிறது. ஒன்று 11th gen Intel, மற்றொன்று AMD ryzen series ஆகும். மேலும் இந்த மடிக்கணினி 2.2K டிஸ்ப்ளே உடன் வந்துள்ளது.
MediaTek is number one
கடந்த மூன்று மாதங்களில் மிகப்பெரிய Chip உற்பத்தி செய்து MediaTek நிறுவனம் முதலிடத்தில் உள்ளது. அதாவது Qualcom நிறுவனத்தை முந்தி முதலிடத்தில் நீடிக்கிறது. மேலும் இந்த வருடத்தில் இந்தியாவில் வெளியான மொபைல்களில் 75 சதவீதம் MediaTek chips தான் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது. உலக அளவில் 2020ஆம் ஆண்டு 32% உபயோகப்படுத்தப்பட்ட MediaTek chips, 2020 ஆம் ஆண்டு 37% உபயோகப்படுத்தப்பட்டுள்ளது.
Advertisement in Space
எலான் மஸ்க் தற்போது விண்வெளியில் விளம்பரம் செய்ய திட்டம் செய்துள்ளதாக சொல்லப் படுகிறது. இதற்கு ஒரு சில கம்பெனிகள் ஒப்புக்கொண்டதாக கூறப்படுகிறது. அதாவது விண்வெளிக்கு செல்லும் செயற்கைக்கோளின் ஒரு பகுதியில் விளம்பரம் செய்யலாம் என எண்ணப்படுகிறது.
Please Wait Next Post...
إرسال تعليق